உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

June 10, 2026

Hot News

IMG-20260607-WA0087
மத்திய கிழக்கு மோதலால் உலக உணவுப் பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து – இலங்கையும் பாதிப்பிலா.!!!
IMG-20260531-WA0017
கைத்தொலைபேசி கையில்: குழந்தைப் பருவம் ஆபத்தில்.!!!

Share :

வங்கி பரிமாற்றம் மூலம் ஐஸ் விற்பனை: பல்கலை மாணவர்களை இலக்கு வைத்த தம்பதி கைது.!!!

-பாறுக் ஷிஹான்-

ஐஸ் போதைப்பொருளை சூட்சுமாக விற்பனை செய்த தம்பதிகளை கைது செய்து சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்திய சம்மாந்துறை பொலிஸார் விசேட விசாரணைகளை தற்போது மேற்கொண்டு வருகின்றனர்.

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதி ஒன்றில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் ஊழல் ஒழிப்பு பிரிவு அதிகாரி றபாய்டீனுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றிற்கமைய இந்நடவடிக்கை கடந்த ஞாயிற்றுக்கிழமை (7) மாலை  மேற்கொள்ளப்பட்டது.

இதன் போது குறித்த சம்பவத்தில்  போதைப்பொருள் விற்பனை செய்த  தம்பதிகள் உட்பட மற்றுமொருவருவரும் கைதாகியுள்ளார். இவர் ஒரு பல்கலைக்கழக மாணவர் (வயது-23)  என குறிப்பிட்டுள்ள பொலிஸார் அம்மாணவன் மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன் ரூபா 12000 செலவு செய்து ஐஸ் போதைப்பொருளை மேற்குறித்த தம்பதிகளினூடாக பெற வந்தவர் என்பதுடன் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டப்பளம் எனும் பகுதியில் சொந்த இடமாக கொண்ட இத்தம்பதி  தோட்டவேலை என்ற போர்வையில் 6 மாத காலமாக  சம்மாந்துறை பகுதி  40 வீட்டுத்திட்டத்தில் ஐஸ் போதைப்பொருட்களை குறித்த தம்பதி விநியோகித்து வந்துள்ளமை ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.

இது தவிர 34, 42 வயதுடய இத்தம்பதிகள்  3 மாத காலமாக  நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டப்பளம் எனும் பகுதியில் வீடு ஒன்றினை பெற்று  தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட கல்விக் கல்லூரி மாணவர்களை இலக்கு வைத்து தனியார் வங்கி ஊடாக ரூபா 10000 ஐ பெற்றுக்கொண்டு வாடிக்கையாக குறித்த போதைப்பொருளை விற்பனை செய்து வந்துள்ளனர்.

அத்துடன் சந்தேக  நபர்கள் வசம் இருந்து 2 மோட்டார் சைக்கிள்கள்,  கைத்தொலைபேசிகள், 2 கிராம் 220 மில்லி கிராம், 500 மில்லி கிராம் 750 மில்லி கிராம்  ஐஸ் போதைப்பொருட்கள், வங்கி புத்தகம், பணம் செலுத்திய வங்கி சிட்டு என்பன பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன.

மேலும் கைத்தொலைபேசிக்கு வங்கியில் வைப்பிலிடப்படும் பணம் மற்றும் வைக்கும் நபர்களின் விபரங்கள்  குறுஞ்செய்தியாக தம்பதியினரின்  கையடக்க தொலைபேசிக்கு வந்தவுடன் போதைப்பொருள் சம்பந்தப்பட்ட நபருக்கு உடனடியாக  விநியோகிக்கப்படும்.

அத்துடன் இச்சம்பவத்தில் கைதான தம்பதியினர் உட்பட மற்றுமொருவர் சட்ட நடவடிக்கைகாக சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய வேளை நீதிவான் கணவன் மற்றுமொரு சந்தேக நபரான மாணவனுக்கு தலா ரூபா 9000 தண்டப்பணம் விதித்த நீதிவான் தம்பதி  பெண்ணிற்கு 14 நாட்கள் விளக்கமறியல் உத்தரவு பிறப்பித்து வழக்கினை மறுதவணை இட்டு ஒத்திவைத்தார்.

இந்த கைது நடவடிக்கையானதும் சோதனை நடவடிக்கையானதும் கிழக்குப் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஸ்ட  பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜெயசுந்தரவின் பணிப்பரைக்கமைய அம்பாறை மாவட்ட  பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்லவின்  உத்தரவிற்கமைய அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்  பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராய்ச்சி வழிநடத்திலில் கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் இப்னு அசார் நெறிப்படுத்தலில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என். நிசாந்த பிரதீப் குமாரவின் ஆலோசனைக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் பொலிஸ் நிலைய ஊழல் ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி என்.றிபாய்டீன் தலைமையிலான பொலிஸார்    சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 872541

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time