உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260628-WA0045
பற்றி எரியும் வர்த்தக நிலையங்களும்... முதலாளிமார்களின் அசட்டுப் போக்கும்.!!!
IMG-20260621-WA0046
வயதான பெற்றோர்களின் பாதுகாப்பும், சமூக பொறுப்பும்: புதிய சட்டமூலமும்.!!!

Share :

கடும் மழையால் புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரி வளாகம்: வெள்ளத்தில் மூழ்கியது.!!!

புத்தளம் பகுதியில் தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழை காரணமாக புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரி வளாகம் வெள்ள நீரில் சூழப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கல்லூரி வளாகத்திற்குள் வெள்ளநீர் புகுந்ததால் பாடசாலை மைதானம் மற்றும் கட்டிடத் தொகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. மேலும் சில வகுப்பறைகளுக்குள்ளும் நீர் புகுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் மாணவர்களின் கற்றல் உபகரணங்கள் மற்றும் பாடசாலைக்குச் சொந்தமான பொருட்களுக்கு சேதம் ஏற்படும் அபாயம் நிலவுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கல்லூரி வீதியூடான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், குறித்த பகுதியூடாக பயணிக்கும் பொதுமக்கள் அவதானத்துடன் செயல்படுமாறும், பாடசாலை சொத்துக்களை பாதுகாக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 933559

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time