உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260809-WA0043
பொதுமக்களின் நிம்மதிக்கு புதிய பாதுகாப்பு; ஒலி மாசுக்கு கடும் கட்டுப்பாடு.!!!
IMG-20260802-WA0014
தேசிய ஷுஹதாக்கள் தினம்: வரலாற்றின் இரத்தச் சுவடுகளும் நல்லிணக்கத்தின் அவசியமும்.!!!

Share :

கொழும்பு கோட்டை மத்திய பஸ் நிலையம் புதுப்பிப்பு நிறைவு: 424 மில்லியன் ரூபாய் செலவில் – மக்கள் பயன்பாட்டிற்கு திறப்பு.!!!

கொழும்பு புறக்கோட்டை பகுதியில் அமைந்துள்ள மத்திய பஸ் நிலையம் புதுப்பிக்கப்பட்டு, இன்று மக்கள் பயன்பாட்டிற்காக அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டது. இலங்கை விமானப்படையின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்ட நவீனமயப்படுத்தும் பணிகளின் பின்னர், இந்த பஸ் நிலையம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ், இரண்டு பஸ் தளங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளதுடன், மொத்தமாக 424 மில்லியன் ரூபாய் செலவில் பணிகள் நிறைவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாரிகள் தெரிவித்ததன்படி, புதிய வசதிகளுடன் கூடிய இந்த நிலையம் மூன்று மாடிகளும் மூன்று பிரிவுகளாக மேம்படுத்தப்பட்டுள்ளது.

இதில், தரைப்பகுதி முக்கிய பஸ் நிலையமாகவும், இரண்டாம் மாடி சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கான ஓய்வு அறைகளாகவும், மூன்றாம் மாடி நிர்வாக மற்றும் செயல்பாட்டு சேவைகளுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த புதுப்பிப்பு மூலம், தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் மற்றும் போக்குவரத்து பணியாளர்கள் சிறந்த மற்றும் சௌகரியமான சேவைகளைப் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1076235

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time