உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260628-WA0045
பற்றி எரியும் வர்த்தக நிலையங்களும்... முதலாளிமார்களின் அசட்டுப் போக்கும்.!!!
IMG-20260621-WA0046
வயதான பெற்றோர்களின் பாதுகாப்பும், சமூக பொறுப்பும்: புதிய சட்டமூலமும்.!!!

Share :

மின்சாரக் கட்டண உயர்வுக்கான திருத்தப்பட்ட மதிப்பீடு – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிப்பு.!!!

எரிபொருள் விலை அதிகரிப்பை கருத்தில் கொண்டு, இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டுக்கான மின்சாரக் கட்டணங்களை உயர்த்துவதற்கான திருத்தப்பட்ட செலவு மதிப்பீடு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேசிய முறைமை செயல்பாட்டாளர் தனியார் நிறுவனம் (National System Operator (Pvt) Ltd) இந்த திருத்தப்பட்ட மதிப்பீட்டை சமர்ப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

மின்சார உற்பத்திக்கான செலவுகள் அதிகரித்துள்ளதன் காரணமாக இந்த திருத்தம் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, எதிர்வரும் மாதங்களில் மின்சாரக் கட்டணங்களில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வாய்ப்புள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மேற்கொள்ளும் ஆய்வு மற்றும் பரிசீலனையின் பின்னர் இறுதி தீர்மானம் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 933745

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time