உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260614-WA0054
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் நிழலில்: இலங்கையின் நீதியும் அதிகாரமும் - தொடரும் கேள்விகளும்.!!!
IMG-20260607-WA0087
மத்திய கிழக்கு மோதலால் உலக உணவுப் பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து – இலங்கையும் பாதிப்பிலா.!!!

Share :

கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசி விற்பனை – வியாபாரிக்கு ரூ.1 இலட்சம் அபராதம்.!!!

(பாறுக் ஷிஹான்)

அரசாங்க கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு அரிசி விற்பனையில் ஈடுபட்ட வியாபாரிக்கு ஒரு இலட்சம் ரூபா அபராதம் கல்முனை நீதவான் நீதிமன்று விதித்துள்ளது.

இன்று (16) குறித்த வழக்கு அம்பாறை மாவட்ட செயலக பாவனையாளர் அதிகார சபையினால் கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதையடுத்து கல்முனை பிரதேசத்தில் உள்ள குறித்த வியாபார நிலைய உரிமையாளருக்கு அரசாங்க கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில் கல்முனை நீதவான் நீதிமன்று ரூபா 100,000 அபராதம் விதித்துள்ளது.

அண்மையில் அம்பாறை மாவட்ட செயலக பாவனையாளார் அலுவல்கள் அதிகார சபையினால் கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது அரசாங்க கட்டுப்பாட்டு விலைக்கு அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த வியாபார நிலையங்கள் அடையாளம் காணப்பட்டிருந்தன.

இதன் அடிப்படையில் குறித்த வியாபார உரிமையாளருக்கு எதிராக அதிகார சபையின் புலானாய்வு உத்தியோகதர்கள் வழக்குத்தாக்கல் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 884667

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time