உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260809-WA0043
பொதுமக்களின் நிம்மதிக்கு புதிய பாதுகாப்பு; ஒலி மாசுக்கு கடும் கட்டுப்பாடு.!!!
IMG-20260802-WA0014
தேசிய ஷுஹதாக்கள் தினம்: வரலாற்றின் இரத்தச் சுவடுகளும் நல்லிணக்கத்தின் அவசியமும்.!!!

Share :

மட்டக்களப்பு–அம்பாறையில் பலத்த மழை எச்சரிக்கை – 50 மி.மீ.க்கும் மேல் வாய்ப்பு.!!!

● வானிலை முன்னறிவிப்பு – 2025 டிசம்பர் 08 அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.

நாடு முழுவதும் வடகிழக்குப் பருவப் பெயர்ச்சி நிலைமை படிப்படியாக தாபிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று இரவு முதல் மழை அளவு அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுகிறது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இடையீடு ஓரிடங்களில் மழை பெறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில், சில பகுதிகளில் 50 மி.மீ.-க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை வீழ்ச்சி ஏற்பட வாய்ப்பு உள்ளது.

நாட்டின் மற்ற பிரதேசங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.

மேலும், மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில பகுதிகளில் அதிகாலைப் பொழுதில் பனிமூட்டம் காணப்படும் என முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மின்னல்-காற்றுக்கு எச்சரிக்கை
இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில், அந்தப் பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசுதல் மற்றும் மின்னல் தாக்கம் ஏற்படக்கூடியதால், பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வானிலை அறிவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

முன்னெச்சரிக்கை நடைமுறைகளாக மின்னல் தாக்கம் அதிகம் இருக்கும் நேரங்களில் வெளிப்புற செயல்களைத் தவிர்க்குமாறும், உயரமான மரங்கள், கோபுரங்கள் அருகில் தங்குவதைக் குறைக்குமாறும்,, வீட்டு மின் இணைப்புகளை பாதுகாப்பாக பயன்படுத்துமாறும், தாழ்நிலப் பகுதிகளில் நீர் தேங்குவதை கவனிக்கவுமாறும், மேலும் தகவல்களுக்கு வானிலை திணைக்களத்தின் காலக்கட்ட அறிவிப்புகளைப் பின்பற்றுமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1075770

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time