உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20261004-WA0025
போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தில் எழும் கேள்விகள்; பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் தெளிவு அவசியமா.!!!
IMG-20260928-WA0033
வெளிப்படையான மனிதவள நிர்வாகத்தை நோக்கி அரசின் புதிய டிஜிட்டல் அடி.!!!

Share :

அனோஜன் மரண தண்டனை விவகாரம்: சமூக வலைத்தளப் பதிவுகள் தொடர்பில் கல்முனை பொலிஸார் எச்சரிக்கை.!!!

• அவதூறான கருத்துகள், இன நல்லுறவைப் பாதிக்கும் பதிவுகளைத் தவிர்க்குமாறு கோரிக்கை – மீறுவோருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை.

சவூதி அரேபியாவில் மரண தண்டனைத் தீர்ப்பை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜனைக் காப்பாற்றுவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், அவருடன் தொடர்புடைய அவதூறான சமூக வலைத்தளப் பதிவுகள் மற்றும் முரண்பாடான கருத்தாடல்கள் தொடர்பில் கல்முனை தலைமையகப் பொலிஸார் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளனர்.

கல்முனை பொலிஸ் பிரிவில் வசித்து வந்த சிவராசா அனோஜனை மரண தண்டனையிலிருந்து காப்பாற்றுவதற்காக இலங்கை அரசாங்கம், சிவில் அமைப்புகள் மற்றும் சர்வதேசப் பொது அமைப்புகள் ஊடாகப் பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இன, மத வேறுபாடுகளுக்கு அப்பால் தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள மக்கள் மத்தியில் இந்த விவகாரம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன், சவூதி அரேபியாவுடனான நேரடிப் பேச்சுவார்த்தைகள் மற்றும் இராஜதந்திர நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், சிலரால் சமூக வலைத்தளங்களிலும் பொது இடங்களிலான கலந்துரையாடல்களிலும் வெளியிடப்படும் கருத்துகள் இன நல்லுறவைப் பாதிக்கும் வகையில் அமைவதை அவதானிக்க முடிவதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனவே, இவ்விவகாரம் தொடர்பில் அவதூறான கருத்துகளை வெளியிடுதல், விஷமத்தனமான பேச்சுகளில் ஈடுபடுதல் மற்றும் இன நல்லுறவைப் பாதிக்கக்கூடிய முகநூல் பதிவுகளைப் பகிர்தல் போன்ற செயற்பாடுகளைத் தவிர்த்துக்கொள்ளுமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மேலும், இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவோர் தொடர்பில் உடனடியாகப் பொலிஸ் நிலையத்துக்கு அறிவிக்குமாறும், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கல்முனை தலைமையகப் பொலிஸ் நிலையத்தின் தலைமைப் பொறுப்பதிகாரி லசந்த களுவாராய்ச்சி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1219910

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time