உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

May 16, 2026

Hot News

IMG-20260510-WA0104
ஈராக் மண்ணில் இஸ்ரேலின் ரகசிய ராணுவத் தளம்: மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிப்பு.!!!
IMG-20260503-WA0077
வன்முறை கலாச்சாரம் அரசியலில்: வெற்றியா அல்லது தோல்வியா.???

Share :

மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தை ஊக்குவிக்க கைகொடுத்த  – இலங்கை முஸ்லிம் செரட்டி செரன்டிப்.!!!

(கற்பிட்டி நிருபர் சியாஜ்)

புத்தளம் மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் நோக்கில் இலங்கை முஸ்லிம் செரட்டி செரன்டிப் (Muslim Charity Serendib Sri Lanka) அமைப்பின் திட்ட எண் 069 அடிப்படையில், கடந்த புதன்கிழமை (10) புத்தளம் எக்ஸ்ஸலண்ட் (School of Excellence) பாடசாலையில் இலவச புத்தகங்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு அமைப்பின் இயக்குநர் முஜாஹித் நிஸார் தலைமையேற்று நிகழ்வை சிறப்பித்தார்.

நிகழ்வில், தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு பல்வேறு பாடப் புத்தகங்களும், வாசிப்பு புத்தகங்களும் வழங்கப்பட்டன.

சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புகளும், பொருளாதார சவால்களும் காரணமாக பாதிக்கப்பட்ட குடும்பங்களின் மாணவர்களுக்கு கல்வி ஆதரவாக இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்துதல், வாசிப்பு பழக்கத்தை உருவாக்குதல் ஆகியவையே இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்களாக அமைப்பினர் குறிப்பிட்டனர்.

இந்த வகை கல்வி நடவடிக்கைகள், எதிர்காலத்தில் மேலும் பல மாணவர்களுக்கு பயனளிக்கும் என பள்ளி நிர்வாகத்தினர் நம்பிக்கை தெரிவித்தனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 814926

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time