உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260614-WA0054
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் நிழலில்: இலங்கையின் நீதியும் அதிகாரமும் - தொடரும் கேள்விகளும்.!!!
IMG-20260607-WA0087
மத்திய கிழக்கு மோதலால் உலக உணவுப் பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து – இலங்கையும் பாதிப்பிலா.!!!

Share :

காத்தான்குடி ஆற்றங்கரை பிரதேசத்தை பசுமையாக்கும்; மரநடுகை வேலைத்திட்டம் ஆரம்பம்.!!!

(ஏ.எல்.எம்.சபீக்)

கிளீன் ஸ்ரீலங்கா தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் “வளமான நாடு – அழகான வாழ்க்கை” எனும் கருப்பொருளில் தேசிய வேலைத்திட்டத்துடன் இணைந்து முன்னெடுக்கப்படும் “மறுமலர்ச்சி நகரம்” எனும் தொணிப்பொருளில் நாடளாவிய ரீதியில் நடைபெற்று வரும் உள்ளூராட்சி வாரத்தையொட்டி, காத்தான்குடியில் இன்று (16) செவ்வாய்க்கிழமை மரநடுகை நிகழ்வு இடம்பெற்றது.

காத்தான்குடி ஆற்றங்கரை பிரதேசத்தை பசுமையாக்கும் நோக்கில், காத்தான்குடி நகர சபையின் தவிசாளர் எஸ்.எச்.எம். அஸ்பர் தலைமையில் நகர சபையின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

உள்ளூராட்சி வார நிகழ்வின் ஒரு பகுதியாக, பல்வேறு இன மரங்கள் காத்தான்குடி வாவிக்கரையோரப் பகுதியில் நடப்பட்டதுடன், அவற்றை பராமரிக்கும் பொறுப்பினை பிரதேச மக்கள் ஏற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் காத்தான்குடி நகர சபையின் பிரதி தவிசாளர் எம்.ஐ.எம். ஜெஸீம்  பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், நகர சபை உறுப்பினர்கள், ஊழியர்கள், சுற்றாடல் பாதுகாப்பு செயற்பாட்டாளர்கள் மற்றும் பிரதேச மக்கள் எனப் பலர் கலந்து கொண்டு பசுமை வளர்ச்சிக்கான தங்களின் பங்களிப்பை வழங்கினர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 884754

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time