உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260614-WA0054
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் நிழலில்: இலங்கையின் நீதியும் அதிகாரமும் - தொடரும் கேள்விகளும்.!!!
IMG-20260607-WA0087
மத்திய கிழக்கு மோதலால் உலக உணவுப் பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து – இலங்கையும் பாதிப்பிலா.!!!

Share :

காத்தான்குடியில் நாளை மறுதினம்; சுனாமி அனர்த்த முன்னாயத்த ஒத்திகை.!!!

(எம். எஸ். எம். நூர்தீன்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பகுதியில் சுனாமி அனர்த்த முன்னாயத்த ஒத்திகை நிகழ்வு நாளை மறுதினம் (05) புதன்கிழமை புதிய காத்தான்குடி 167C கிராம உத்தியோகத்தர் பிரிவில் இடம்பெறவுள்ளது.

இது தொடர்பான தயாரிப்பு மற்றும் ஒருங்கிணைப்பு கூட்டம் இன்று (03) புதிய காத்தான்குடி 167C பல நோக்கு மண்டபத்தில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் சியாட் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில், காத்தான்குடி பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் திருமதி சில்மியா, கிராம உத்தியோகத்தர்களுக்கான நிர்வாக உத்தியோகத்தர் ஜரூப், காத்தான்குடி ஆதார வைத்தியசாலை வைத்தியர் டாக்டர் திருமதி அலீமா அப்துர் ரஹ்மான், 167C பிரிவு கிராம உத்தியோகத்தர் சம்ஹா, அபிவிருத்தி உத்தியோகத்தர் நஜ்மி, பிரிவு அபிவிருத்தி உத்தியோகத்தர் இர்பான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் பாதுகாப்பு அதிகாரிகள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், கிராம அபிவிருத்தி சங்க பிரதிநிதிகள் ஆகியோரும் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் வரவிருக்கும் சுனாமி அனர்த்த முன்னாயத்த ஒத்திகை தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டதுடன், நிகழ்வை சிறப்பாக முன்னெடுக்க தேவையான குழுக்களும் நியமிக்கப்பட்டன.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 884629

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time