பொலிஸாரின் திடீர் சுற்றிவளைப்பில் சிக்கிய இருவர்; ஐஸ் போதைப்பொருள் மீட்பு.!!!
-தில்சாத் பர்வீஸ்-
அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பழைய வளத்தாப்பிட்டி பகுதியில் இன்று (30) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது, 4 கிராமுக்கும் அதிகமான ஐஸ் என சந்தேகிக்கப்படும் போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட இந்த விசேட நடவடிக்கையின்போது, பழைய வளத்தாப்பிட்டி பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய நபரும், வாழைச்சேனை பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய நபருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது நடவடிக்கையின்போது சந்தேகநபர்களிடமிருந்து 4 கிராமுக்கும் அதிகமான ஐஸ் என சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் உள்ளிட்ட பொருட்களுடன் சந்தேகநபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
கிழக்கு மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மகேஷ் சேனரத்னவின் பணிப்புரையின் பேரிலும், அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்லவின் உத்தரவின் பேரிலும் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராய்ச்சியின் வழிநடத்தலிலும், கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் இப்னு அசாரின் நெறிப்படுத்தலிலும் இந்த நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என். நிசாந்த பிரதீப் குமாரவின் ஆலோசனையின் பேரில், ஊழல் ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி என். றிபாய்டீன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.