உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260614-WA0054
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் நிழலில்: இலங்கையின் நீதியும் அதிகாரமும் - தொடரும் கேள்விகளும்.!!!
IMG-20260607-WA0087
மத்திய கிழக்கு மோதலால் உலக உணவுப் பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து – இலங்கையும் பாதிப்பிலா.!!!

Share :

பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குழுவின் ஏற்பாட்டில்; மீராபாலிகா மகா லித்தியாலயத்தில் ஆசிரியர் தின விழா – 2025.!!!

(எம்.ரி.எம்.யூனுஸ்)

மட்டக்களப்பு மத்தி கல்வி வலய காத்தான்குடி மீராபாலிகா மகா வித்தியாலய தேசிய பாடசாலையின் சர்வதேச ஆசிரியர் தினம் 2025 இன்று (09) வியாழக்கிழமை கல்லூரி மாநாட்டு மண்டபத்தில் சிறப்பாக இடம்பெற்றது.

பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குழுவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இவ் விழாவில் கல்வித் துறையில் சிறந்த பங்களிப்பு செய்த ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட்டனர். இந்நிகழ்வில் அதிபர், ஆசிரியர்களின் பாடல், அபிநயம், நாடகம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் என்பன மேடையேற்றப்பட்டது.

பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குழுவின் தலைவரும், அதிபருமான அஷ்ஷெய்க் யூ.எல். மன்சூர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலய, வலயக் கல்விப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.எம். ஜவாத் கலந்து கொண்டார்.

பிரதம அதிதி தனதுரையில் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பையும், தியாகத்தையும் பாராட்டியதோடு,  சமூக வளர்ச்சியின் தூண்களாக ஆசிரியர்கள் இருப்பதாகவும், அவர்கள் மாணவர்களின் எதிர்காலத்தை வடிவமைக்க பெரும் பணி ஆற்றி வருவதாகவும் உரையாற்றினார்.

இந்நிகழ்வில் பாடசாலை பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குழுவின் செயலாளர் பொறியியலாளர் எம்.எம். பைஸால் மற்றும் உறுப்பினர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குழுவின் உறுப்பினர்கள் உட்பட ஆசிரியர்கள், மாணவ தலைவர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 884692

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time