உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260628-WA0045
பற்றி எரியும் வர்த்தக நிலையங்களும்... முதலாளிமார்களின் அசட்டுப் போக்கும்.!!!
IMG-20260621-WA0046
வயதான பெற்றோர்களின் பாதுகாப்பும், சமூக பொறுப்பும்: புதிய சட்டமூலமும்.!!!

Share :

வெளிநாடுகளில் கைது செய்யப்பட்ட: பாதாள உலக உறுப்பினர்கள் விரைவில் இலங்கைக்கு.!!!

வெளிநாடுகளில் கைது செய்யப்பட்டுள்ள 13 பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் விரைவில் இலங்கைக்கு அழைத்து வரப்பட உள்ளதாக பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.

சர்வதேச பொலிஸாருடன் இணைந்து இலங்கை பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகள் மற்றும் சிறப்பு சுற்றிவளைப்புகளின் மூலம் இந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பல்வேறு நாடுகளில் மறைந்து செயல்பட்டு வந்த இந்த பாதாள உலகக் குழுவினரைக் கண்டறிந்து கைது செய்வதற்காக நீண்டகாலமாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தற்போது வெளிநாட்டு பாதுகாப்பு அதிகாரிகளின் காவலில் இருப்பதாகவும், தேவையான சட்ட நடைமுறைகள் நிறைவேற்றப்பட்ட பின்னர் அவர்களை இலங்கைக்கு கொண்டு வர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், குற்றச்செயல்களுடன் தொடர்புடைய மேலும் சிலரை கைது செய்யும் நடவடிக்கைகளும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 934076

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time