உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260510-WA0104
ஈராக் மண்ணில் இஸ்ரேலின் ரகசிய ராணுவத் தளம்: மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிப்பு.!!!
IMG-20260503-WA0077
வன்முறை கலாச்சாரம் அரசியலில்: வெற்றியா அல்லது தோல்வியா.???

Share :

பல்கலைக்கழக அனுமதி வழிகாட்டி கைநூல்: இன்று நள்ளிரவு வெளியீடு.!!!

அரசு பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கான வழிகாட்டி கைநூல் இன்று நள்ளிரவு வெளியிடப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

2025 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், மாணவர்கள் பல்கலைக்கழக பாடநெறிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை மற்றும் நடைமுறைகள் தொடர்பான விரிவான வழிகாட்டுதல்கள் இக்கைநூலில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் கபில செனவிரத்ன இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

இம்முறை உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய 2 இலட்சத்து 81 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்களில், 1 இலட்சத்து 76 ஆயிரத்து 527 மாணவர்கள் பல்கலைக்கழக நுழைவிற்குத் தகுதி பெற்றுள்ளதாகவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

தகுதி பெற்ற மாணவர்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் மூலம் இன்று நள்ளிரவு முதல் இந்த வழிகாட்டி கைநூலை பதிவிறக்கம் செய்து பயன்பெற முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 806224

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time