உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260614-WA0054
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் நிழலில்: இலங்கையின் நீதியும் அதிகாரமும் - தொடரும் கேள்விகளும்.!!!
IMG-20260607-WA0087
மத்திய கிழக்கு மோதலால் உலக உணவுப் பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து – இலங்கையும் பாதிப்பிலா.!!!

Share :

பொலீஸ் உத்தியோகத்தர்களுக்கு;  நுகர்வேர் அலுவல்கள் அதிகார சபையின் செயலமர்வு.!!!

(பாறுக் ஷிஹான்)

கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொலீஸ் உத்தியோகத்தர்களுக்கு நுகர்வேர் அலுவல்கள் அதிகார சபையின் விசேஷட விழிப்புணர்வு செயலமர்வு இன்று (27) கல்முனை பொலீஸ் நிலைய கூட்ட மன்டபத்தில் இடம் பெற்றது.

இச்செயலமர்வு கல்முனை பொலிஸ் நிலையத்தின் தலைமையக பொறுப்பதிகாரி லசந்த களுவாராய்ச்சி தலமையில் வர்த்தகஇ வாணிபஇ உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் அம்பாறை மாவட்ட செயலக நுகர்வேர் அலுவல்கள் அதிகார சபையினால் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தின் பொலீஸ் உத்தியோகத்தர்களுக்கு பல்வேறு விளக்கங்கள் வழங்கப்பட்டது.

கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தின் நிர்வாக பொறுப்பதிகாரி எம் றபீக் வழிகாட்டலில் இவ் நிகழ்வு இடம் பெற்றதுடன் இவ்விழிப்புணர்வு செயலமர்வின் பிரதான வளவாளராக நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் புலனாய்வு அதிகாரி திரு.எம்.எச்.எம் றிபாஜ் அத்துடன் புலனாய்வு அதிகாரிகளான இஷட்.எம் ஸாஜீத் மற்றும் ஏ.பீ.எம் றிப்சாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன் போது நுகர்வோர் உரிமைகள்,பொறுப்புகள்,சட்டங்கள்,பாதுகாப்பு மற்றும் பொருட்கள் சேவைகளின் போது கவனிக்க வேண்டிய முக்கியமான விடயங்கள் மற்றும் தற்போதைய சந்தையில் பொருட்களின் அரசாங்க கட்டுப்பாட்டு விலை மற்றும் அதிகார சபையின் சட்ட திட்டங்கள் சம்மந்தமாக விரிவுரை விளக்க காட்சி ஊடாக வழங்கப்பட்டது

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 884487

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time