கணினி முறைமை கோளாறு: பொலிஸ் கிளியரன்ஸ் சான்றிதழ் வழங்குவது தற்காலிகமாக இடைநிறுத்தம்.!!!
இலங்கை பொலிஸ் தலைமையகத்தில் ஏற்பட்டுள்ள கணினி முறைமை தொடர்பான தொழில்நுட்ப கோளாறு காரணமாக, பொலிஸ் கிளியரன்ஸ் சான்றிதழ்களை (Police Clearance Certificates) வழங்கும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் தலைமையகத்தின் கணினி முறைமையில் ஏற்பட்டுள்ள கோளாறே இதற்கான காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, வெளிநாட்டு வேலைவாய்ப்பு, குடிவரவு, கல்வி மற்றும் விசா நடவடிக்கைகளுக்காக பொலிஸ் கிளியரன்ஸ் சான்றிதழ்களைப் பெற வேண்டியவர்களுக்கு தற்காலிக சிரமம் ஏற்படக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.
கணினி முறைமை கோளாறு விரைவில் சரிசெய்யப்பட்ட பின்னர், பொலிஸ் கிளியரன்ஸ் சான்றிதழ்களை வழங்கும் நடவடிக்கை மீண்டும் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.