உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

November 4, 2026

Hot News

IMG-20261102-WA0034
தரவரிசையில் முன்னேறும் இலங்கை; மக்களின் வாழ்க்கையில் எப்போது முன்னேற்றம்?
IMG-20261026-WA0070
பேரிடர்களின் பிடியில் உலகம்: இயற்கையின் எச்சரிக்கையும் மனிதகுலத்தின் பொறுப்பும்.!!!

Share :

நானுஓயாவில் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த லொறி: மயிரிழையில் உயிர் தப்பிய மூவர்.!!!

நுவரெலியா – ஹட்டன் – நானுஓயா சுற்றுவட்ட வீதியின் கிரிமெட்டிய பகுதியில், சுமார் 100 அடி பள்ளத்தில் லொறியொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இன்று (04) முற்பகல் சுமார் 10 மணியளவில் இடம்பெற்ற இவ்விபத்தில், லொறியில் பயணித்த மூவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.

கதிர்காமத்திலிருந்து தலவாக்கலை நோக்கித் தீபாவளிப் பண்டிகைக்கான விற்பனைப் பொருட்களான ஆடைகளை ஏற்றிக்கொண்டு பயணித்த லொறியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

பயணித்துக்கொண்டிருந்த லொறி திடீரென வீதியை விட்டு விலகி பள்ளத்தை நோக்கிச் சென்றபோது, அதிலிருந்த மூவரும் உடனடியாக வெளியே குதித்ததால் உயிர் தப்பியுள்ளனர். இதனையடுத்து, லொறி சுமார் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து பலத்த சேதமடைந்துள்ளது.

இவ்விபத்து தொடர்பில் நானுஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1292367

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time