உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

November 4, 2026

Hot News

IMG-20261102-WA0034
தரவரிசையில் முன்னேறும் இலங்கை; மக்களின் வாழ்க்கையில் எப்போது முன்னேற்றம்?
IMG-20261026-WA0070
பேரிடர்களின் பிடியில் உலகம்: இயற்கையின் எச்சரிக்கையும் மனிதகுலத்தின் பொறுப்பும்.!!!

Share :

நீதிமன்றம் பிணை வழங்கியும் விடுதலையாக முடியாத நாமல்: மற்றொரு வழக்கில் தொடரும் விளக்கமறியல்.!!!

கிரிஷ் (Krrish) நிறுவனத்துடனான கொடுக்கல் வாங்கல் விவகாரம் தொடர்பான வழக்கில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் இன்று (03) பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது.

எனினும், அவருக்கு எதிராக நிலுவையில் உள்ள மற்றுமொரு வழக்கில் பிணை கிடைக்காத காரணத்தினால், அவர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு பிரதம நீதவான் அசங்க போதரகம முன்னிலையில் குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்தப் பிணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, தலா 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளிலும், ஒரு இலட்சம் ரூபாய் ரொக்கப் பிணையிலும் செல்ல நாமல் ராஜபக்ஷவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், அவருக்கு வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வதற்குத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், எதிர்வரும் 06ஆம் திகதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்போது நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதேவேளை, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கான எயார்பஸ் விமானங்களைக் கொள்வனவு செய்த விவகாரத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் இலஞ்சப் பரிமாற்றம் தொடர்பான மற்றுமொரு வழக்கில் நாமல் ராஜபக்ஷ விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதன் காரணமாக, கிரிஷ் வழக்கில் பிணை வழங்கப்பட்ட போதிலும், மற்றைய வழக்கின் காரணமாக அவரால் சிறையிலிருந்து விடுதலையாக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1292529

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time