உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

November 4, 2026

Hot News

IMG-20261102-WA0034
தரவரிசையில் முன்னேறும் இலங்கை; மக்களின் வாழ்க்கையில் எப்போது முன்னேற்றம்?
IMG-20261026-WA0070
பேரிடர்களின் பிடியில் உலகம்: இயற்கையின் எச்சரிக்கையும் மனிதகுலத்தின் பொறுப்பும்.!!!

Share :

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புதிய பணிப்பாளராக வைத்தியகலாநிதி ஜீ.சுகுணன் பதவியேற்பு.!!!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புதிய பணிப்பாளராக கடமையேற்ற வைத்திகலாநிதி குணசிங்கம் சுகுணன் அவர்களுக்கு அமோக வரவேற்பு இன்று (04) இடம்பெற்றது..

இவர் இதற்கு முன்னர் களுவாஞ்சிகுடி வைத்தியசாலை பணிப்பாளராகவும், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராகவும் வவுணியா வைத்தியசாலையின் பணிப்பாளராகவும், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராகவும் கல்முனை ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளராகவும் கடமையாற்றியிருந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக  இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவத்துறையில் நீண்ட  அனுபவத்தைக் கொண்டுள்ள இவர், தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராகப் பொறுப்பேற்றுள்ளது இப்பகுதி மக்களுக்குக் கிடைத்த ஒரு வரப்பிரசாதமாகும் என இதன் போது பலராலும் கருத்து தெரிவிக்கப்பட்டது.

மக்களின் எதிர்பார்ப்பும் நம்பிக்கையும்
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் தேவைகளையும், இங்கிருந்து சிகிச்சை பெற்றுச் செல்லும் மக்களின் சிக்கல்களையும் தான் நன்கு அறிந்திருப்பதாகவும் இவற்றிற்கான தீர்வினை மிக விரைவில் பெற்றுக்கொடுக்க முன்னின்று செயற்படவுள்ளதாக வைத்தியகலாநிதி ஜீ.சுகுணன் அவர்கள் இதன் போது தெரிவித்தார்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியகலாநிதி மைதிலி தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் யாழ்ப்பாணம் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியகலாநிதி சத்தியமூர்த்தி, மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் சிவம் பாக்கியநாதன், கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் உள்ளிட்ட கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் உயிரதிகாரிகள், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர்கள் உள்ளிட்ட வைத்திய அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் என பலரும் பங்கேற்று புதிய பணிப்பாளரை வரவேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1292566

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time