உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

November 4, 2026

Hot News

IMG-20261102-WA0034
தரவரிசையில் முன்னேறும் இலங்கை; மக்களின் வாழ்க்கையில் எப்போது முன்னேற்றம்?
IMG-20261026-WA0070
பேரிடர்களின் பிடியில் உலகம்: இயற்கையின் எச்சரிக்கையும் மனிதகுலத்தின் பொறுப்பும்.!!!

Share :

இந்திய அரசின் நிதியுதவியில் காத்தான்குடி ஜாமியத்துர் ரப்பானியா அரபுப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கி வைப்பு.!!!

• இந்தியப் பிரதி உயர்ஸ்தானிகர் மைத்ரே குல்கர்னி பிரதம அதிதியாகப் பங்கேற்பு.

இந்திய மக்களின் அன்பளிப்பாகவும், இந்திய அரசின் நிதியுதவித் திட்டத்தின் கீழும், காத்தான்குடி ஜாமியத்துர் ரப்பானியா அரபுப் பல்கலைக்கழக மாணவர்களின் உயர்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி வாய்ப்புகளை மேம்படுத்தும் நோக்கில் மடிக்கணினிகள் வழங்கும் நிகழ்வு நேற்று (03) மாலை நடைபெற்றது.

காத்தான்குடி அப்துல் ஜவாத் ஆலிம் வலியுல்லாஹ் பவுண்டேஷன் தலைவர் மற்றும் காத்தான்குடி நகர சபையின் பிரதித் தவிசாளர் எம்.ஐ.எம். ஜெசீம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், இலங்கைக்கான இந்தியப் பிரதி உயர்ஸ்தானிகர் ஸ்ரீ மைத்ரே குல்கர்னி பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு மாணவர்களுக்கு மடிக்கணினிகளை உத்தியோகபூர்வமாக வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் அப்துல் ஜவாத் ஆலிம் வலியுல்லாஹ் பவுண்டேஷனின் ஸ்தாபகர் மௌலவி ஏ.ஜே. அப்துர் ரவூப் மிஸ்பாஹி, ஜாமியத்துர் ரப்பானியா அரபுப் பல்கலைக்கழகத்தின் அதிபர் மௌலவி எம்.எம். அப்துல் மஜீத் உள்ளிட்ட கல்வியாளர்கள், பிரமுகர்கள் மற்றும் பெருமளவிலான பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

இதன்போது, பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட இந்தியப் பிரதி உயர்ஸ்தானிகருக்கு பொன்னாடை போர்த்தி, விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

தொடர்ந்து நிகழ்வில் உரையாற்றிய இந்தியப் பிரதி உயர்ஸ்தானிகர், இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க நட்புறவு என்றும் தொடரும் எனத் தெரிவித்தார்.

மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய உயர்கல்வி வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கும் இந்திய அரசின் இத்தகைய உதவிகள் முக்கிய பங்களிப்பாக அமையும் என இந்நிகழ்வில் சுட்டிக்காட்டப்பட்டது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1292757

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time