உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

November 4, 2026

Hot News

IMG-20261102-WA0034
தரவரிசையில் முன்னேறும் இலங்கை; மக்களின் வாழ்க்கையில் எப்போது முன்னேற்றம்?
IMG-20261026-WA0070
பேரிடர்களின் பிடியில் உலகம்: இயற்கையின் எச்சரிக்கையும் மனிதகுலத்தின் பொறுப்பும்.!!!

Share :

புதிய காத்தான்குடி தெற்கு 167C கிராம உத்தியோகத்தர் பிரிவில் நான்கு முக்கிய சமூக நலத்திட்டங்கள் முன்னெடுப்பு.!!!

-எம்.ரி.எம்.யூனுஸ்-

புதிய காத்தான்குடி தெற்கு 167C கிராம உத்தியோகத்தர் பிரிவில் மாணவர்கள் மற்றும் தெரிவுசெய்யப்பட்ட பயனாளர்களின் நலனைக் கருத்திற்கொண்டு நான்கு முக்கிய சமூக நலத்திட்ட நிகழ்வுகள் காத்தான்குடி பிரதேச செயலாளர் நிஹாறா மௌஜூத் அவர்களின் வழிகாட்டலில் முன்னெடுக்கப்பட்டன.

இதன் கீழ், மாணவர்களுக்கான சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் சான்றிதழ்கள் வழங்குதல், பாடசாலை உபகரணங்கள் வழங்குதல், தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்குத் தொழில் உபகரணங்கள் வழங்குதல் மற்றும் மாணவர்களுக்குத் துவிச்சக்கர வண்டிகள் வழங்குதல் ஆகிய நிகழ்வுகள் இன்று (03) செவ்வாய்க்கிழமை புதிய காத்தான்குடி தெற்கு பலநோக்கு மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக காத்தான்குடி பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் எம்.எஸ். சில்மியா கலந்து சிறப்பித்தார்.

கௌரவ விருந்தினராக காத்தான்குடி பிரதேச செயலக தலைமையக முகாமையாளர் பாத்தும்மா பரீட் கலந்து கொண்டதுடன், சிறப்பு விருந்தினர்களாக சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர் சுபந்தினி கண்ணன், புதிய காத்தான்குடி சமுர்த்தி வங்கி மற்றும் வலய முகாமையாளர் எஸ்.எச். முஸம்மில், காத்தான்குடி சமுர்த்தி வங்கி மற்றும் வலய முகாமையாளர் எம்.ஏ.எம். சுல்மி, சமுதாய அடிப்படை அமைப்புகளுக்கான அபிவிருத்தி உத்தியோகத்தர் ரதீஸ் காந்தி ஆகியோரும் பங்கேற்றனர்.

மேலும், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புகளின் தலைவிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர்.

இந்நிகழ்வுகள் 167C புதிய காத்தான்குடி தெற்கு பிரிவின் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எஸ்.எம். நூர்தீன் அவர்களின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இச்செயற்பாடுகள் ஊடாக மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கும், பொருளாதார ரீதியாகப் பயனாளர்களை வலுப்படுத்துவதற்கும் சமூக நல மேம்பாட்டிற்கும் பங்களிப்பு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1292387

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time