உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

November 4, 2026

Hot News

IMG-20261102-WA0034
தரவரிசையில் முன்னேறும் இலங்கை; மக்களின் வாழ்க்கையில் எப்போது முன்னேற்றம்?
IMG-20261026-WA0070
பேரிடர்களின் பிடியில் உலகம்: இயற்கையின் எச்சரிக்கையும் மனிதகுலத்தின் பொறுப்பும்.!!!

Share :

டின் இலக்கம் பெறுவதற்கு மக்கள் அவசரப்படத் தேவையில்லை: அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ.!!!

டின் (TIN) இலக்கங்களைப் பெற்றுக்கொடுக்கும் நடைமுறை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்பதால், பொதுமக்கள் எவ்வித அவசரமுமின்றி நிதானமாக இச்சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் சமூக ஊடகங்கள் உள்ளிட்ட பல்வேறு தளங்களில் பரப்பப்படும் பொய்ப் பிரச்சாரங்கள் மற்றும் வதந்திகளைக் கண்டு மக்கள் குழப்பமடைய வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

புதிய வங்கிக் கணக்குகளைத் திறத்தல் மற்றும் வாகன அனுமதிப்பத்திரங்களைப் புதுப்பித்தல் போன்ற சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கு டின் இலக்கம் உடனடியாக இல்லாத சந்தர்ப்பங்களில், தேசிய அடையாள அட்டையைப் பயன்படுத்தி குறித்த சேவைகளைப் பெற்றுக்கொள்ளும் வகையில் தற்காலிகத் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

இதற்கான புதிய வழிகாட்டல்களை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வெளியிட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் 18 வயதுக்கு மேற்பட்ட சுமார் 17 மில்லியன் மக்களில் ஏற்கனவே 13 மில்லியன் பேருக்கு டின் இலக்கம் வழங்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் சுமார் 1.2 மில்லியன் பேர் மாத்திரமே வருமான வரி செலுத்துவோராகப் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், எஞ்சியுள்ள சுமார் 4 மில்லியன் மக்களுக்கே டின் இலக்கம் வழங்கப்பட வேண்டியுள்ளதாகவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் தெரிவித்துள்ளார்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1292605

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time