14 மாடிக் கட்டடத்திலிருந்து தவறி விழுந்து 12 வயது சிறுவன் உயிரிழப்பு.!!!
கொழும்பு – 09 பகுதியில் அமைந்துள்ள 14 மாடிக் குடியிருப்புக் கட்டடத்திலிருந்து தவறி விழுந்து 12 வயது சிறுவன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
நேற்று (16) மாலை இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் மருதானை பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, உயிரிழந்த சிறுவன் மேலும் சில சிறுவர்களுடன் குறித்த கட்டடத்தின் மேல் மாடியில் அமைந்துள்ள நீச்சல் தடாகத்திற்கு அருகில் நின்று சுற்றுப்புறத்தைப் பார்த்துக்கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது, கட்டடத்தின் திறந்திருந்த ஒரு பகுதியின் ஊடாக சிறுவன் தவறி கீழே விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் படுகாயமடைந்த சிறுவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த சிறுவன் கொழும்பு – 09 பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதானை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.