பிள்ளையான் உள்ளிட்ட நால்வருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்.!!!
முன்னாள் கிழக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிவசுப்ரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் உள்ளிட்ட நால்வருக்கு எதிராக சட்டமா அதிபரால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பொலன்னறுவை மேல் நீதிமன்றத்தில் இந்தக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த காலங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பேராசிரியர் ரவீந்திரநாத் கடத்தல் மற்றும் கொலைச் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ள நிலையில், சட்டமா அதிபர் திணைக்களத்தினால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக சட்ட நடவடிக்கைகள் மற்றும் வழக்கு விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படவுள்ளன.