உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20261004-WA0025
போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தில் எழும் கேள்விகள்; பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் தெளிவு அவசியமா.!!!
IMG-20260928-WA0033
வெளிப்படையான மனிதவள நிர்வாகத்தை நோக்கி அரசின் புதிய டிஜிட்டல் அடி.!!!

Share :

1,540 புதிய கிராம உத்தியோகத்தர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கி வைப்பு.!!!

கிராம உத்தியோகத்தர் சேவையின் III ஆம் தரத்திற்கு தகுதி பெற்ற 1,540 புதிய அதிகாரிகளுக்கான நியமனக் கடிதங்கள் இன்று (08) முற்பகல் அலரி மாளிகையில் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் ஜனாதிபதி கலந்துகொண்டு, சிறந்த பொதுச் சேவையின் முக்கியத்துவம் மற்றும் அரசாங்கத்தின் கிராமிய அபிவிருத்திக் கொள்கைகள் தொடர்பில் கருத்துத் தெரிவித்தார்.

கிராமப்புறங்களிலேயே பொருளாதார வாய்ப்புகளை உருவாக்குதல், கிராமம் மற்றும் நகரங்களுக்கு இடையிலான சிறந்த வீதிக் கட்டமைப்பை மேம்படுத்துதல், தொடர்பாடல் வலையமைப்பை வலுப்படுத்துதல் மற்றும் மக்களின் சேவைத் தேவைகளை திறம்பட நிறைவேற்றுதல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை ஜனாதிபதி வலியுறுத்தினார்.

“மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான முக்கிய இணைப்புப் பாலமாக கிராம உத்தியோகத்தர்கள் செயற்படுகின்றனர்” எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

புதிதாக நியமிக்கப்பட்ட அனைத்து கிராம உத்தியோகத்தர்களும் மக்களுக்காக அர்ப்பணிப்புடன் சிறந்த சேவையை வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட ஜனாதிபதி, அவர்களுக்கு தனது வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1215840

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time