உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20261004-WA0025
போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தில் எழும் கேள்விகள்; பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் தெளிவு அவசியமா.!!!
IMG-20260928-WA0033
வெளிப்படையான மனிதவள நிர்வாகத்தை நோக்கி அரசின் புதிய டிஜிட்டல் அடி.!!!

Share :

மத்திய குற்ற விசாரணைப் பணியகம் தடுப்புக் காவல் இடமாக அறிவிப்பு: ஜனாதிபதியினால் அதிவிசேட வர்த்தமானி வெளியீடு.!!!

கொழும்பில் அமைந்துள்ள மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் (CCIB) கட்டிடம், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் தடுப்புக் காவல் நிலையமாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியும் பாதுகாப்பு அமைச்சருமான அனுர குமார திஸாநாயக்கவினால் வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் இந்த அறிவிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த வர்த்தமானி அறிவித்தல் 2026 ஒக்டோபர் 06ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளது.

1979ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தின் 9ஆம் பிரிவின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி, CCIB அமைந்துள்ள வளாகம் தடுப்புக் காவல் இடமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தத் தடுப்புக் காவல் வசதி கொழும்பு 05, தொழிலாளர் செயலகக் கட்டிடத்தின் 7ஆம் மாடியில் அமைந்துள்ள மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க 2026 செப்டம்பர் 17ஆம் திகதி, ஜனாதிபதியாகவும் பாதுகாப்பு அமைச்சராகவும் தனது அதிகாரத்தின் கீழ் கையொப்பமிட்டுள்ளார்.

வர்த்தமானி இலக்கம்: 2509/11 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1216142

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time