போட்டிப் பரீட்சையில் திறமை காட்டிய 45 பேருக்கு கிழக்கு மாகாண சாரதி நியமனம்.!!!
கிழக்கு மாகாண சாரதி சேவையில் நிலவும் வெற்றிடங்களை நிரப்பும் வகையில், புதிதாகத் தெரிவுசெய்யப்பட்ட 45 சாரதிகளுக்கான நியமனங்கள் நேற்று (17) வழங்கப்பட்டன.
கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்தலால் ரத்னசேகர தலைமையில், ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டன.
இதன்போது, 12 பேர் மட்டுப்படுத்தப்பட்ட அடிப்படையிலும், 33 பேர் பொது அடிப்படையிலும் சாரதி சேவைக்கு நியமிக்கப்பட்டனர்.
போட்டிப் பரீட்சையில் பெற்ற புள்ளிகளின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தெரிவுசெய்யப்பட்டதுடன், அவர்களது தகைமைகள் முறையாகச் சரிபார்க்கப்பட்ட பின்னரே நியமனங்கள் வழங்கப்பட்டதாக கிழக்கு மாகாண ஆளுநர் செயலகம் தெரிவித்துள்ளது.
மேலும், குறித்த நியமனங்கள் மிகவும் வெளிப்படையான முறையில் முன்னெடுக்கப்பட்டதாகவும் ஆளுநர் செயலகம் குறிப்பிட்டுள்ளது.




