மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம் – சவூதிக்கு 48 F-35 போர் விமானங்களை வழங்கும் அமெரிக்கா.!!!
சவூதி அரேபியாவின் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில், 48 F-35 போர் விமானங்களை விற்பனை செய்வதற்கான சுமார் 24.3 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான ஒப்பந்தத்திற்கு அமெரிக்க வெளியுறவுத்துறை அனுமதி வழங்கியுள்ளது. எனினும், இந்த விற்பனைக்கு அமெரிக்க காங்கிரஸின் ஒப்புதல் இன்னும் தேவைப்படுகிறது.
அமெரிக்க வெளியுறவுத்துறையின் தகவலின்படி, இந்த முன்மொழியப்பட்ட ஒப்பந்தம் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை மற்றும் தேசிய பாதுகாப்பு இலக்குகளுடன் தொடர்புடையதாகும். ஒப்பந்தத்தில் 48 F-35 விமானங்களுடன் 49 தொடர்புடைய இயந்திரங்களும் இடம்பெறுகின்றன.
இதற்கிடையில், சவூதி அரேபியா மற்றும் யேமனின் ஹவுதி அமைப்புக்கு இடையிலான பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஹவுதிகள் சவூதி F-15 போர் விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்தியதாகக் கூறியுள்ளனர். இந்தக் கூற்று தொடர்பாக சுயாதீன உறுதிப்படுத்தல் இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
