உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260614-WA0054
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் நிழலில்: இலங்கையின் நீதியும் அதிகாரமும் - தொடரும் கேள்விகளும்.!!!
IMG-20260607-WA0087
மத்திய கிழக்கு மோதலால் உலக உணவுப் பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து – இலங்கையும் பாதிப்பிலா.!!!

Share :

காத்தான்குடி ஹிழுறிய்யா வித்தியாலயத்தில் – அஹதிய்யா கற்கை நெறி ஆரம்பம்.!!!

(எம்.பஹத் ஜுனைட்)

றவ்ழா ஹதீஜா அஹதியா பாடசாலையினால் முன்னெடுக்கப்பட்டுவரும் அஹதிய்யா கற்கை நெறியை மட்/மம/ ஹிழுறிய்யா வித்தியாலயத்தில் ஆரம்பிப்பது தொடர்பான கலந்துரையாடல் வெள்ளிக்கிழமை (24) பாடசாலையில் இடம்பெற்றது.

பாடசாலை அதிபர் எஸ்.ஐ.யாஸிர் அறபாத் தலைமையில் இடம்பெற்ற இக் கலந்துரையாடலில் றவ்ழா ஹதீஜா அஹதியா பாடசாலையின் அதிபர் மெளலவியா எம்.என். மஹ்பூ நிஸா மஹ்ரூப் , பொருளாளர் யூ.எல்.எம்.அஸ்ஹர் (ஜமாலி), காத்தான்குடி ஜம் இய்யதுல் உலமா சபை செயலாளர் எம்.ஐ. எம்.ஜவாஹிர்(பலாஹி) ,ஹிழுறிய்யாஹ் பள்ளிவாயல் பேஷ் இமாம் இஸட்.ஏ.எம்.நெளஸர்(ஹுமைதி), செயலாளர் எம்.அஜ்வத் , ஊடகவியலாளர் எம்.ஐ.ஏ.மஜீட் மற்றும் ஆசிரியர்களும் கலந்துகொண்டனர்.

தரம் 1- 3வரையுள்ள கல்வி பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள்
அஹதிய்யா கற்கை நெறியை தங்களது பாடசாலையில் ஆரம்பிக்க கேட்டுக்கொண்டதால் வலயக் கல்விப் பணிப்பாளர் அவர்களிடம் நிர்வாகத்தினரால் விடுக்கப்பட்டகோரிக்கைக்கு இணங்க அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கற்கை நெறி ஆரம்பிப்பதற்கான உத்தியோகபூர்வமான கடிதம் அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 884652

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time