பேக்கரியில் வாங்கிய பேஸ்டிக்குள் கரப்பான் பூச்சி – காத்தான்குடியில் அதிர்ச்சி சம்பவம்.!!!
காத்தான்குடி ஊர் வீதியில் அமைந்துள்ள பிரபல பேக்கரியில் வாங்கப்பட்ட பேஸ்டிக்குள் கரப்பான் பூச்சி காணப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹஜ் பயணிகளை வழியனுப்பி வைப்பதற்காக நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொள்ள சென்றவர்களுக்கு வழங்குவதற்காக, வீட்டார் குறித்த பேக்கரியில் இருந்து பேஸ்டிகளை வாங்கி சென்றுள்ளனர். பின்னர் அவை வீட்டில் வழங்கப்பட்ட போது, ஒரு சிறுமி சாப்பிட்ட பேஸ்டிக்குள் கரப்பான் பூச்சி இருந்தது தெரியவந்துள்ளது.
சம்பவத்தின் போது, அந்த சிறுமி கரப்பான் பூச்சி இருப்பதை கவனிக்காத நிலையில், அதன் ஒரு பகுதி உடலுக்குள் சென்றிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
உடனடியாக இது குறித்து காத்தான்குடி சுகாதார அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் சுகாதார துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, உணவுப் பாதுகாப்பு மற்றும் சுகாதார தரநிலைகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.