உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

June 28, 2026

Hot News

IMG-20260621-WA0046
வயதான பெற்றோர்களின் பாதுகாப்பும், சமூக பொறுப்பும்: புதிய சட்டமூலமும்.!!!
IMG-20260614-WA0054
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் நிழலில்: இலங்கையின் நீதியும் அதிகாரமும் - தொடரும் கேள்விகளும்.!!!

Share :

5 கிலோ தங்கம் வழங்குவதாகக் கூறி 18 கோடி ரூபா மோசடி: சந்தேகநபர் கைது.!!!

கொழும்பில் வர்த்தகர் ஒருவரிடம் 5 கிலோ கிராம் தங்கத்தை வழங்குவதாகக் கூறி 18 கோடி ரூபாவிற்கும் அதிக பணத்தைப் பெற்று மோசடி செய்த சம்பவம் தொடர்பாக ஒருவரை குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) கைது செய்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட நிலையில், அவரை நாளை (12) வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

சந்தேகநபரை அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்துமாறு பொலிஸார் முன்வைத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதவான், நாளைய தினம் அவரை அடையாள அணிவகுப்பில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் பணிப்புரை விடுத்துள்ளார்.

பெரியமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரிடம் 5 கிலோ தங்கம் வழங்குவதாகக் கூறி 18 கோடி ரூபாவிற்கும் அதிகமான பணத்தை மோசடி செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், இச்சம்பவம் தொடர்பாக மற்ற இரண்டு சந்தேகநபர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 929823

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time