உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260809-WA0043
பொதுமக்களின் நிம்மதிக்கு புதிய பாதுகாப்பு; ஒலி மாசுக்கு கடும் கட்டுப்பாடு.!!!
IMG-20260802-WA0014
தேசிய ஷுஹதாக்கள் தினம்: வரலாற்றின் இரத்தச் சுவடுகளும் நல்லிணக்கத்தின் அவசியமும்.!!!

Share :

ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட இருவரைக் கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை பிறப்பிப்பு.!!!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட இருவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்துமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

கோட்டை நீதவான் பசன் அமரசேன நேற்று (15) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில், நீதிமன்ற விசாரணைக்காக அவர்கள் முன்னிலையாகத் தவறியதன் காரணமாகவே இந்த பிடியாணை உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய, அவர்களின் பிணையாளர்களுக்கு அறிவித்தல்களை வழங்கவும், தேவையான அழைப்பாணைகளை பிறப்பிக்கவும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனாதிபதி மாளிகையின் நுழைவாயிலுக்கு அருகில் நடத்தப்பட்ட போராட்டம் தொடர்பாக ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட மேலும் 12 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1066790

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time