உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

May 15, 2026

Hot News

IMG-20260510-WA0104
ஈராக் மண்ணில் இஸ்ரேலின் ரகசிய ராணுவத் தளம்: மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிப்பு.!!!
IMG-20260503-WA0077
வன்முறை கலாச்சாரம் அரசியலில்: வெற்றியா அல்லது தோல்வியா.???

Share :

சாய்ந்தமருது நகர சபை ஸ்தாபிப்புக்கு ஆதம்பாவா எம்.பியின் ஒத்துழைப்பு பெற பள்ளிவாசல் நிர்வாகம் முன்வர வேண்டும் – மறுமலர்ச்சி மன்றம்.!!!

சாய்ந்தமருது நகர சபையை ஸ்தாபிக்கும் பணிகளை ஜனாதிபதி ஊடாக துரிதப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதற்கு பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா அவர்களின் முழுமையான ஒத்துழைப்பை பெற்றுக் கொள்வதற்கு பெரிய பள்ளிவாசல் நிர்வாகம் முன்னிற்க வேண்டும் எனக் கோரும் தீர்மானம் ஒன்றை சாய்ந்தமருது மறுமலர்ச்சி மன்றம் நிறைவேற்றியுள்ளது.

சாய்ந்தமருது மறுமலர்ச்சி மன்றத்தின் நிறைவேற்றுக் குழுக் கூட்டம் புதன்கிழமை இரவு அதன் தலைவரும் ஓய்வுபெற்ற கல்விப் பணிப்பாளருமான அல்ஹாஜ் எம்.எம். அப்துல் ஜப்பார் தலைமையில் நடைபெற்ற போதே இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சாய்ந்தமருது நகர சபைக்காக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் சட்ட ரீதியானது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதுடன் இரு மாத காலத்தினுள் எல்லை நிர்ணயத்தை மேற்கொண்டு, அதனை வர்த்தமானியில் பிரசுரிக்குமாறும் அதன் பின்னர் தேர்தலை நடத்துமாறும் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் இதனை உரிய காலப் பகுதிக்குள் நிறைவு செய்வதற்கும் அதன் பிரகாரம் சாய்ந்தமருது நகர சபையை ஸ்தாபிப்பதற்கும் அதற்கான கட்டிட வசதிகள் மற்றும் ஆளணி உள்ளிட்ட பௌதீக வளங்களை ஏற்படுத்துவதற்கும் நிர்வாக செயற்பாடுகள் மற்றும் சேவைகளை ஆரம்பிப்பதற்கும் துரித நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டிய தேவையுள்ளது.

இந்த விடயங்களை மத்திய அரசின் உள்ளுராட்சி, மாகாண சபைகள் அமைச்சு மற்றும் கிழக்கு மாகாண சபை என்பனவே செயற்படுத்த வேண்டிய பொறுப்புடமையை கொண்டிருக்கின்றன.

இவற்றையெல்லாம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தின் ஊடாகவே நிறைவேற்ற வேண்டியுள்ளது.

ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் கரிசணையுடனான துரித நடவடிக்கைகளை சாத்தியப்படுத்த வேண்டுமாயின் இந்த மண்ணின் அரச தரப்பு பாராளுமன்ற உறுப்பினராகவும் ஜனாதிபதி அநுரவின் நெருங்கிய தோழராகவும் திகழ்கின்ற அபூபக்கர் ஆதம்பாவா அவர்களின் முழுமையான ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என்பதை எவரும் மறுப்பதற்கில்லை. எனவே இந்த விடயத்தில் அவர் முழு மூச்சுடன் ஈடுபடுவதற்கு ஊர் சமூகத்தினரால் ஊக்கமளிக்கப்பட வேண்டும்.

ஆகையினால் இந்த விவகாரத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவா அவர்களை முன்னிலைப்படுத்தி, செயற்படுவதற்கு சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் இடைக்கால நிர்வாக சபை அவசர நடவடிக்கைகளை முன்னெடுக்க முன்வர வேண்டும் என்று சாய்ந்தமருது மறுமலர்ச்சி மன்றம் நிறைவேற்றியுள்ள தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், சாய்ந்தமருது நகர சபைக்கான முதலாவது தேர்தலானது, சபை ஸ்தாபிக்கப்பட்டதன் பின்னரே நடத்தப்படும். தேர்தல் அறிவிப்பு விடுக்கப்பட்டு, போதிய கால அவகாசம் வழங்கப்பட்டே தேர்தல் நடைபெறும் என்பதால் இப்போதே தேர்தலை முன்னிலைப்படுத்தி, வரிந்து கட்டிக் கொண்டு செயற்படுவதற்கு எந்த அவசரமும் இல்லை என்பதைப் புரிந்து கொண்டு, முதலில் சபையை வெற்றிகரமாக ஸ்தாபிப்பதற்கும் அதற்கான வளங்களைக் கொண்டு வந்து சேர்ப்பதற்குமான செயற்றிட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கி பள்ளிவாசல் தலைமையில் ஒன்றிணைந்து செயற்பட அனைத்து தரப்பினரும் முன்வர வேண்டும் எனவும் சாய்ந்தமருது மறுமலர்ச்சி மன்றம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 814012

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time