உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260809-WA0043
பொதுமக்களின் நிம்மதிக்கு புதிய பாதுகாப்பு; ஒலி மாசுக்கு கடும் கட்டுப்பாடு.!!!
IMG-20260802-WA0014
தேசிய ஷுஹதாக்கள் தினம்: வரலாற்றின் இரத்தச் சுவடுகளும் நல்லிணக்கத்தின் அவசியமும்.!!!

Share :

காத்தான்குடி மத்திய கல்லூரி வளங்களை பாதுகாப்பதில் பின்வாங்கமாட்டோம்; நீதிமன்றில் சந்திப்போம் – எம்.பீ.எம். பிர்தௌஸ்.!!!

காத்தான்குடி மத்திய மகா வித்தியாலயத்தையும் அதன் அனைத்து வளங்களையும் பாதுகாப்பதில் எந்த நிலையிலும் பின்னடையப்போவதில்லை என காத்தான்குடி பிரதேச அபிவிருத்திக் குழுவின் இணைப்பாளர் எம்.பீ.எம். பிர்தௌஸ் (நளீமி) தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் காத்தான்குடி பொது மக்கள் தொடர்பாடல் அமைப்பாளரும், சுற்றாடல் அமைச்சின் மாவட்ட இணைப்பாளருமான அவர், தனது உத்தியோகபூர்வ முகநூல் பதிவின் மூலம் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மக்களால் வழங்கப்பட்டுள்ள அங்கீகாரத்தின் அடிப்படையில் கிடைத்துள்ள அரச அதிகாரங்களை பயன்படுத்தி தங்களது பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், “இன்ஷா அல்லாஹ் நீதிமன்றில் சந்திப்போம் மிஸ்டர் ஹிஸ்புல்லாஹ்” எனவும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கருத்து பதிவு காத்தான்குடி அரசியல் மற்றும் கல்வி வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1066790

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time