உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260809-WA0043
பொதுமக்களின் நிம்மதிக்கு புதிய பாதுகாப்பு; ஒலி மாசுக்கு கடும் கட்டுப்பாடு.!!!
IMG-20260802-WA0014
தேசிய ஷுஹதாக்கள் தினம்: வரலாற்றின் இரத்தச் சுவடுகளும் நல்லிணக்கத்தின் அவசியமும்.!!!

Share :

காத்தான்குடி பொலிஸ் பிரிவில் இடி மின்னல் தாக்கம்: வீடு சேதம் – மூவர் வைத்தியசாலையில் அனுமதி.!!!

(ஜே.கே)

மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று மாலை பெய்த இடியுடன் கூடிய கடும் மழை காரணமாக இடி மின்னல் தாக்கத்தினால் வீடு ஒன்று பெருமளவில் சேதமடைந்துள்ளதுடன் வீட்டில் தங்கி இருந்த மூவர் அதிர்ச்சியினால் காயமடைந்த நிலையில் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஞ்சந்தொடுவாய் விளையாட்டு மைதானத்திற்கு அருகில் அமைந்துள்ள வீடு ஒன்று இடி மின்னல் தாக்கத்தினால் பெருமளவில் சேதமடைந்துள்ளது வீட்டில் தங்கி இருந்த தாயையும் தந்தையும் தவிர ஏனைய மூன்று பிள்ளைகளும் அதிர்ச்சி மற்றும் காயமடைந்த நிலையில் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.13,15,19 வயதுடையவர்களே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று மாலை கடும் மழை பெய்ததுடன் இடி மின்னல் மற்றும் சுழல் காற்று வீசியது சுழல் காற்று காரணமாக பல இடங்களில் மரங்கள் விழுந்து விழுந்துள்ளன

இடி மின்னல் காரணமாக குறித்த வீடு பெருமளவில் சேதமடைந்துள்ளதுடன் வீட்டின் மின்சார உபகரணங்கள் முற்றாக சேதுமடைந்துள்ளதமை குறிப்பிடத்தக்கது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1066789

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time