உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20261004-WA0025
போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தில் எழும் கேள்விகள்; பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் தெளிவு அவசியமா.!!!
IMG-20260928-WA0033
வெளிப்படையான மனிதவள நிர்வாகத்தை நோக்கி அரசின் புதிய டிஜிட்டல் அடி.!!!

Share :

மின்சார சபையின் சுய விருப்பு ஓய்வுத் திட்டம்: 1,898 பேருக்கு ரூ.8.5 பில்லியன் இழப்பீடு.!!!

மின்சார சபையில் முன்னெடுக்கப்பட்டு வரும் மறுசீரமைப்பு செயற்பாடுகளின் ஒரு பகுதியாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சுய விருப்பு ஓய்வுத் திட்டத்தின் கீழ், 1,898 ஊழியர்கள் ஓய்வு பெறுவதற்காக விண்ணப்பித்துள்ளனர்.

இவ்வாறு ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு இழப்பீடாக வழங்குவதற்காக 8.5 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்படவுள்ளதாக வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வலுசக்தி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பில், மின்சார சபையில் நீண்டகாலமாக பணியாற்றி சுய விருப்பு ஓய்வுத் திட்டத்தைத் தேர்ந்தெடுத்துள்ள ஊழியர்களை கௌரவிக்கும் வகையில் இந்த விசேட இழப்பீட்டுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், மின்சார சபைக்கு பல வருடங்களாக சிறந்த சேவையை வழங்கிய ஊழியர்களை பாராட்டும் நோக்கில் “பெருமைமிகு சேவை – பாதுகாப்பான நிறைவு” என்ற கருப்பொருளின் கீழ், இன்று அதற்கான விசேட நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1215330

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time