உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260614-WA0054
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் நிழலில்: இலங்கையின் நீதியும் அதிகாரமும் - தொடரும் கேள்விகளும்.!!!
IMG-20260607-WA0087
மத்திய கிழக்கு மோதலால் உலக உணவுப் பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து – இலங்கையும் பாதிப்பிலா.!!!

Share :

மட்டக்களப்பு மாவட்டத்தில் கனமழை — கட்டுமுறிவில் அதிகபட்சமாக 74 மி.மீ. பதிவு.!!!

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரமாக நீடித்து வரும் மழைவீழ்ச்சி காரணமாக பல பிரதேசங்களில் கணிசமான மழை அளவுகள் பதிவாகியுள்ளன. இன்று (24) காலை 8.30 மணி வரை முடிவடைந்த 24 மணி நேரத்தில், கட்டுமுறிவு பிரதேசத்தில் அதிகபட்சமாக 74 மில்லி மீற்றர் மழை பதிவாகியுள்ளது.

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையின் தாக்கத்தால் மட்டக்களப்பு முழுவதும் தொடர்ந்து மழையுடன் கூடிய காலநிலை நிலவுகிறது என வானிலை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

மழை அளவீட்டு நிலையங்களின் தகவலின்படி, மட்டக்களப்பு மாவட்டத்தில் பதிவான மழைவீழ்ச்சி பின்வருமாறு: மட்டக்களப்பு — 66.6 மி.மீ, வாகனேரி — 55.1 மி.மீ, உன்னிச்சை — 42.6 மி.மீ, தும்பங்கேணி — 33 மி.மீ, உறுகாமம் — 19.8 மி.மீ, நவகிரி — 16 மி.மீ இந்த விவரங்களை மட்டக்களப்பு வானிலை அவதான நிலைய பொறுப்பதிகாரி ஊடகங்களுக்கு வழங்கியுள்ளார்.

2025 ஜனவரி முதல் இதுவரை மட்டக்களப்பு மாவட்டத்தில் மொத்தம் 1305.2 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 884577

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time