உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260614-WA0054
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் நிழலில்: இலங்கையின் நீதியும் அதிகாரமும் - தொடரும் கேள்விகளும்.!!!
IMG-20260607-WA0087
மத்திய கிழக்கு மோதலால் உலக உணவுப் பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து – இலங்கையும் பாதிப்பிலா.!!!

Share :

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் புதிய தலைவருக்கு – காத்தான்குடி மீடியா போரம் கௌரவம்.!!!

(எம்.ஐ.அப்துல் நஸார்)

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் புதிய தலைவராக தொிவு செய்யப்பட்டுள்ள விடிவெள்ளி பத்திரிகையின் பிரதம ஆசிரியர், சிரேஷ்ட ஊடகவியலாளர், எம்.பி.எம். பைரூஸ் அவா்களை கௌரவிக்கும் நிகழ்வு சனிக்கிழமை (04) நாஸ் கெம்பஸ் கேட்போர் கூடத்தில் (Naas Campus Auditorium) நடைபெற்றது.

காத்தான்குடி மீடியா பேரத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.எஸ்.எம்.நூர்தீன் தலைமையில் இக் கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

காத்தான்குடி மீடியா பேரத்தின் உறுப்பினா் மௌலவி என்.எம்.எம். நௌபர் (பலாஹி) அவா்களின் கிராஅத்துடன் ஆரம்பமான இந் நிகழ்வில் வரவேற்புரையை காத்தான்குடி மீடியா பேரத்தின் உப தலைவர் எஸ்.ஏ.கே. பழீலுர்ரஹ்மான் அவர்களால் நிகழ்த்தப்பட்டது.

நிகழ்வின் தலைமையுரை காத்தான்குடி மீடியா பேரத்தின் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர்
எம்.எஸ்.எம்.நூர்தீன் அவர்களால் நிகழ்த்தப்பட்டது.

விசேட உரையை போரத்தின் ஆயுட்காலத் தலைவர் மௌலவி எஸ்.எம்.எம். முஸ்தபா (பலாஹி) அவர்களால் நிகழ்த்தப்பட்டது.

அதனையடுத்து வாழ்த்துக் கவிதை காத்தான்குடி நவ இலக்கிய மன்றத்தின் செயலாளர் ஓய்வுபெற்ற ஆசிரியர், வித்யாகீா்த்தி எம்.எம்.எம். அமீா் அலி அவா்களால் வாசிக்கப்பட்டது.

தொடர்ந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் புதிய தலைவராக தொிவு செய்யப்பட்டுள்ள விடிவெள்ளி பத்திரிகை.யின் பிரதம ஆசிரியர், சிரேஷ்ட ஊடகவியலாளர், எம்.பி.எம். பைரூஸ் அவா்களை கௌரவிக்கும் நிகழ்வு இடம்பற்றது.

இதன்போது காத்தான்குடி மீடியா போரத்தின் உப தலைவா் எஸ்.ஏ.கே. பழீலுர் ரஹ்மான் அவா்களால் பொன்னாடை போர்த்தப்பட்டு, காத்தான்குடி மீடியா பேரத்தின் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர்
எம்.எஸ்.எம்.நூர்தீன் அவா்களால் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவமளிக்கப்பட்டது.

அதனையடுத்து ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் புதிய தலைவர் எம்.பி.எம். பைரூஸ் அவர்களின் ஏற்புரை இடம்பெற்றது.

நிகழ்வின் நன்றியுரை போரத்தின் உப செயலாளர் ஏ.எல்.அதீப் அஹமட் அவர்களால் நிகழ்த்தப்பட்டது.

மேற்படி நிகழ்வில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா காத்தான்குடி கிளையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.அப்துல் கபூா் (மதனி), காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் பதில் தலைவர் ஓய்வுபெற்ற அதிபா் எம்.சீ.எம்.ஏ. சத்தார், காத்தான்குடி நகர சபையின் பிரதித் தவிசாளர் எம்.ஐ.எம்.ஜெஸீம், நகர சபை உறுப்பினர் ஈ.எம்.றுஸ்வின், ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் புதிய தலைவர் எம்.பி.எம். பைரூஸ் அவர்களின் குடும்பத்தினர் உட்பட காத்தான்குடி மீடியா பேரத்தின் உறுப்பினர்கள், ஊர் பிரமுகர்கள், முக்கியஸ்தர்கள், சமூக ஆா்வலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 884703

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time