உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260614-WA0054
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் நிழலில்: இலங்கையின் நீதியும் அதிகாரமும் - தொடரும் கேள்விகளும்.!!!
IMG-20260607-WA0087
மத்திய கிழக்கு மோதலால் உலக உணவுப் பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து – இலங்கையும் பாதிப்பிலா.!!!

Share :

மட்டக்களப்பில் முதியோர் தினத்தை முன்னிட்டு – முதியோர் கௌரவிப்பு விழா.!!!

சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் முதியோர் கௌரவிப்பு விழா நேற்று (12), மட்டக்களப்பு திராய்மடுவில் அமைந்துள்ள புதிய மாவட்ட செயலக மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் தலைமையிட்டிருந்ததுடன், நிகழ்வின் ஒழுங்குகளை மாவட்ட செயலக உதவி மாவட்ட செயலாளர் கு. பிரணவன் மேற்கொண்டிருந்தார்.

இவ்விழாவில், 2024 ஆம் ஆண்டு சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு மாவட்ட செயலகத்தினால் நடத்தப்பட்ட கவிதை, கட்டுரை, அனுபவப் பகிர்வு, சிறுகதை போன்ற ஆக்கத்திறன் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசில்கள் வழங்கப்பட்டன.

அத்துடன், 2025 ஆம் ஆண்டுக்கான சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு முதியோர்களுக்கான தேசிய செயலகத்தினால் நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற சிறந்த சுய தொழில் பயனாளி, சிறந்த முதியோர் சங்கம், சிறந்த முதியோர் சம்மேளனம், மற்றும் சிறந்த முதியோர் பகல் நேர பராமரிப்பு நிலையம் ஆகிய பிரிவுகளுக்கான பரிசில்கள் மற்றும் சான்றிதழ்கள் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டன.

இதன் போது, முதியோர் சங்கங்களினால் ஆடல், பாடல் மற்றும் தாளலயம் போன்ற கலாச்சார நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டு நிகழ்வுக்கு வண்ணம் சேர்த்தன.

விழாவிற்கு மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சனி ஶ்ரீகாந்த் விசேட அதிதியாக கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தார்.

மேலும், மாவட்ட செயலக சமூக சேவை உத்தியோகத்தர் திருமதி எஸ். கோணேஸ்வரன், முதியோர் மேம்பாட்டு உத்தியோகத்தர் திருமதி ஏ. துஷியந்தி,
உதவி மாவட்ட செயலாளர் பிரிவிற்கான பதவி நிலை உதவியாளர் கே. மொகமட் றிழா உள்ளிட்ட மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 884447

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time