இந்தியா–இலங்கை தரைப்பாலம்: இலங்கைக்கு பாரிய பொருளாதார நன்மைகள் கிடைக்கும் வாய்ப்பு – கொள்கை ஆய்வு அறிக்கை.!!!
இந்தியா மற்றும் இலங்கையை இணைக்கும் வகையில் முன்மொழியப்பட்டுள்ள தரைப்பாலத் திட்டம் செயல்படுத்தப்பட்டால், இலங்கைக்குப் பாரிய பொருளாதார நன்மைகள் கிடைக்கக்கூடும் என மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் வெளியிட்டுள்ள புதிய கொள்கை விளக்க அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“இந்திய–இலங்கை தரைவழி இணைப்பை மதிப்பிடுதல்” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆய்வு அறிக்கையில், வலுவான தரைவழித் தொடர்பு ஏற்படுத்தப்படுவதன் மூலம் இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தகம், சுற்றுலா மற்றும் பிராந்திய வளர்ச்சி ஆகியவை குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இந்தத் திட்டத்தின் சாதகமான அம்சங்கள் பல உள்ளதாக அறிக்கை சுட்டிக்காட்டினாலும், சில முக்கிய எச்சரிக்கைகளையும் முன்வைத்துள்ளது.
குறிப்பாக, பாக்கு நீரிணை மற்றும் ஆதாம் பாலம் (ராமர் பாலம்) சுற்றியுள்ள பகுதிகள் மிகவும் உணர்திறன் கொண்ட கடல்சார் சுற்றுச்சூழல் அமைப்புகளையும் வனவிலங்கு வாழ்விடங்களையும் கொண்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், இத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு முன்பு விரிவான சூழலியல் தாக்க மதிப்பீடு மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அந்த அறிக்கை வலியுறுத்தியுள்ளது.