உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260517-WA0018
சமூக வளர்ச்சியின் அடித்தளம்: கல்வியிலா அல்லது அபிவிருத்தியிலா நிலைத்திருக்கும்???
IMG-20260510-WA0104
ஈராக் மண்ணில் இஸ்ரேலின் ரகசிய ராணுவத் தளம்: மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிப்பு.!!!

Share :

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மே 20, 22 ஆம் திகதிகளில் மட்டக்களப்பு–அம்பாறை மாவட்டங்களுக்கு விஜயம்.!!!

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க எதிர்வரும் மே 20 மற்றும் 22 ஆம் திகதிகளில் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த விஜயத்தின் முதற்கட்டமாக மே 20 ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்திற்குச் செல்லும் ஜனாதிபதி, பழைய மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ள மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளார்.

மேலும் போதைப்பொருள் ஒழிப்பை இலக்காகக் கொண்டு மட்டக்களப்பு வெபர் விளையாட்டரங்கில் நடத்தப்படவுள்ள “ரட்டம எகட்ட” (முழு நாடும் ஒன்றாக) தேசிய வேலைத்திட்டத்திலும் ஜனாதிபதி பங்கேற்கவுள்ளார்.

இதனைத் தொடர்ந்து மே 22 ஆம் திகதி அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, நிந்தவூரில் நிர்மாணிக்கப்படவுள்ள அஷ்ரப் ஞாபகார்த்த கலாச்சார மண்டபத்திற்கான நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

அத்துடன் அம்பாறை நகரில் அமைக்கப்படவுள்ள புதிய வர்த்தகத் தொகுதிக்கான கட்டுமானப் பணிகளையும் இதன்போது ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

இந்த விஜயத்தின் இறுதி நிகழ்வாக அம்பாறை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ள மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு பிராந்தியத்தின் அபிவிருத்திப் பணிகள் தொடர்பாக ஜனாதிபதி கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 820469

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time