உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260809-WA0043
பொதுமக்களின் நிம்மதிக்கு புதிய பாதுகாப்பு; ஒலி மாசுக்கு கடும் கட்டுப்பாடு.!!!
IMG-20260802-WA0014
தேசிய ஷுஹதாக்கள் தினம்: வரலாற்றின் இரத்தச் சுவடுகளும் நல்லிணக்கத்தின் அவசியமும்.!!!

Share :

2026 வாக்காளர் பெயர்ப் பட்டியல் திருத்தம்: விபரங்களை சரிபார்க்க தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு.!!!

2026ஆம் ஆண்டிற்குரிய வாக்காளர் பெயர்ப் பட்டியல் பதிவு மற்றும் திருத்தம் தொடர்பாக தேர்தல் ஆணைக்குழு முக்கிய அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதன்படி, இவ்வாண்டுக்கான வாக்காளர் பெயர்ப் பட்டியலில் தங்களது பெயர் இடம்பெறாதவர்கள் அல்லது பெயர், முகவரி மற்றும் தேசிய அடையாள அட்டை இலக்கம் உள்ளிட்ட விபரங்களில் பிழைகள் உள்ளவர்கள், அது தொடர்பாக தங்களது கிராம உத்தியோகத்தர் அலுவலகத்தில் விசாரிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

மேலும், 2009ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 01ஆம் திகதிக்கு முன்னர் பிறந்தவர்கள் தங்களது பெயர்கள் வாக்காளர் பெயர்ப் பட்டியலில் பதிவு செய்யப்பட்டுள்ளனவா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரவிருக்கும் பதிவுச் செயல்முறைக்கு முன்னதாக, தங்களது விபரங்கள் துல்லியமாக பதிவு செய்யப்பட்டுள்ளதை உறுதிப்படுத்துமாறு பொதுமக்களிடம் தேர்தல் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.

அதேவேளை, தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்றும் தங்களது விபரங்கள் சரியானவையா என்பதை பொதுமக்கள் பரிசீலித்து அறிந்து கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1066791

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time