உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260614-WA0054
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் நிழலில்: இலங்கையின் நீதியும் அதிகாரமும் - தொடரும் கேள்விகளும்.!!!
IMG-20260607-WA0087
மத்திய கிழக்கு மோதலால் உலக உணவுப் பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து – இலங்கையும் பாதிப்பிலா.!!!

Share :

காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் குறைபாடுகளை கண்டறிவதற்காக; உயர் அதிகாரிகளினால் பரிசோதனை.!!!

(ஜே.கே)

பொலிஸ் நிலையங்களின் குறைபாடுகளை கண்டறிவதற்கான பொலிஸ் திணைக்கள உயர் அதிகாரிகளினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதற்கமைய காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் மீதான பரிசோதனை நேற்று (21) காலை மட்டக்களப்பு மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஏ.எல். முஹம்மத் ஜமீல் தலைமையில் இடம்பெற்றது.

காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.எம்.ஐ. ரத்நாயக்கவின் முன்னிலையில் இடம் பெற்ற பரிசோதனையின் போது பொலிசாரின் சீருடைகள் மற்றும் வாகனம் பொலிஸ் நிலையத்தின் கட்டிடங்கள் உட்பட பொலிஸ் நிலையத்தின் அனைத்து பிரிவுகளும் முழுமையாக பரிசோதனை செய்யப்பட்டன.

பொலிசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் பரிசோதனைகளை நடத்தினார்.

இதன்போது பொலிஸ் நிலையத்தில் கடமை புரியும் பொலிசாரின் சீருடைகள் மற்றும் வாகனங்களிலுள்ள குறைபாடுகளையும் அவர் கண்டறிந்தமை குறிப்பிடத்தக்கது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 884741

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time