மாகாண சபைத் தேர்தல் குறித்து முக்கிய கலந்துரையாடல்: 42 தரப்புகள் இணைந்து கூட்டுப் பிரகடனம்.!!!
தாமதமடைந்து வரும் மாகாண சபைத் தேர்தல்களை விரைவாக நடத்துவது மற்றும் அதற்கான தேர்தல் முறைமைகள் குறித்து அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகளுக்கு இடையிலான விசேட கலந்துரையாடல் கொழும்பில் இன்று (26) நடைபெற்றது.
இந்தக் கலந்துரையாடலில் அரசியல் கட்சிகளின் செயலாளர்கள், பிரதிநிதிகள் மற்றும் தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
இதில் 42 எதிர்க்கட்சிகள் மற்றும் கண்காணிப்பு அமைப்புகள் பங்கேற்ற நிலையில், ஒரே ஒரு கட்சியைத் தவிர ஏனைய அனைத்து தரப்பினரும் இணைந்து ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கூட்டுப் பிரகடனத்தில் கையெழுத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்கள் பலரும் நேரில் கலந்துகொண்டனர்.
ஆளுங்கட்சித் தரப்பில் தேசிய மக்கள் சக்தியின் செயலாளர் டாக்டர் நிஹால் அபேசிங்கவும் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துவது குறித்து ஏற்பட்ட இந்த இணக்கம் அரசியல் வட்டாரங்களில் முக்கிய கவனத்தை பெற்றுள்ளது.