உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

May 18, 2026

Hot News

IMG-20260517-WA0018
சமூக வளர்ச்சியின் அடித்தளம்: கல்வியிலா அல்லது அபிவிருத்தியிலா நிலைத்திருக்கும்???
IMG-20260510-WA0104
ஈராக் மண்ணில் இஸ்ரேலின் ரகசிய ராணுவத் தளம்: மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிப்பு.!!!

Share :

மருந்து கொள்வனவில் பாரிய மோசடி; கெஹெலிய உள்ளிட்ட 12 பேருக்கு எதிராக – குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.!!!

கொழும்பு நிரந்தர மூவர் நீதிமன்றில் இன்று (26) முறைகேடான ஆன்டிபயடிக் மருந்து கொள்முதல் விவகாரம் தொடர்பாக முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 12 பேருக்கு எதிராக அரசாங்க தரப்பு வழக்கு தாக்கல் செய்துள்ளது.

இந்த வழக்கு இன்று (26) கொழும்பு நிரந்தர மூவர் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, 13 குற்றச்சாட்டுகளை உள்ளடக்கிய குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டுகளின்படி, ஹ்யூமன் இம்யூனோகுளோபுலின் மற்றும் ரிடொக்ஸிமாப் (Rituximab) எனப்படும் மருந்துகள் இல்லாத வேறு பொருட்களைக் கொண்ட 6,195 குப்பிகளை சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோகப் பிரிவுக்கு வழங்கி, இலங்கை அரசின் 144.4 மில்லியன் ரூபா நிதியை மோசடியாக தவறாகப் பயன்படுத்தியதாகவும், இதற்காக சதி செய்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணைக்காக சுமார் 350 சாட்சிகளும், 300-க்கும் மேற்பட்ட வழக்கு ஆவணங்களும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 822100

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time