உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

May 17, 2026

Hot News

IMG-20260510-WA0104
ஈராக் மண்ணில் இஸ்ரேலின் ரகசிய ராணுவத் தளம்: மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிப்பு.!!!
IMG-20260503-WA0077
வன்முறை கலாச்சாரம் அரசியலில்: வெற்றியா அல்லது தோல்வியா.???

Share :

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மூதூர் மக்களுக்கு புத்தாடைகள் வழங்கிய கண்டி விகாராதிபதி.!!!

தித்வா வெள்ளம் மற்றும் புயல் அனர்த்தத்தினால் வாழ்வாதாரத்தை இழந்த மூதூர் பிரதேச மக்களுக்கு நிவாரண உதவியாக புத்தாடைகள் வழங்கும் நிகழ்வு இன்று (17) நடைபெற்றது.

மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சாபிநகர் – வேதத்தீவு கிராமங்களில் வசிக்கும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு இந்த உதவிகள் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கண்டி – கந்தானை விகாரையின் விகாராதிபதி ஹந்தான சந்தகிரிசேய மதகுரு அவர்கள் நேரில் வருகை தந்து, மனிதாபிமான அடிப்படையில் புத்தாடைகளை வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் (DIG), மூதூர் மற்றும் தோப்பூர் பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் மற்றும் பிரதேச மக்கள் பலரும் கலந்துகொண்டனர்.

மேலும், இன்றைய தினம் மூதூர் பிரதேசத்துடன் சேர்த்து வெருகல் மற்றும் சேருநுவர பிரதேச செயலகப் பிரிவுகளிலும் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 819046

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time