உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260621-WA0046
வயதான பெற்றோர்களின் பாதுகாப்பும், சமூக பொறுப்பும்: புதிய சட்டமூலமும்.!!!
IMG-20260614-WA0054
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் நிழலில்: இலங்கையின் நீதியும் அதிகாரமும் - தொடரும் கேள்விகளும்.!!!

Share :

அஸ்வெசும திட்டத்தின் கீழ் முதியோருக்கான மே மாத கொடுப்பனவு நாளை வங்கி கணக்குகளில்.!!!

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கான மே மாத கொடுப்பனவுகளை நாளை (29) முதல் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, ‘அஸ்வெசும’ திட்டத்தின் முதலாம் மற்றும் இரண்டாம் கட்டங்களின் கீழ் தகுதி பெற்ற சுமார் 7 இலட்சம் முதிய பயனாளிகளுக்காக மொத்தமாக 3,493,915,000 ரூபாய் நிதியை அரசாங்கம் விடுவித்துள்ளது.

இதில், முதலாம் கட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட 625,128 முதிய பயனாளிகளுக்காக 3,125,600,000 ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, இரண்டாம் கட்டத்தின் கீழ் 73,663 முதிய பயனாளிகளுக்காக 368,315,000 ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து பயனாளிகளும் நாளை முதல் தங்களுக்கான முதியோர் கொடுப்பனவுகளை அஸ்வெசும பயனாளிகள் வங்கிக் கணக்குகள் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் என நலன்புரி நன்மைகள் சபை மேலும் அறிவித்துள்ளது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 931333

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time