உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260809-WA0043
பொதுமக்களின் நிம்மதிக்கு புதிய பாதுகாப்பு; ஒலி மாசுக்கு கடும் கட்டுப்பாடு.!!!
IMG-20260802-WA0014
தேசிய ஷுஹதாக்கள் தினம்: வரலாற்றின் இரத்தச் சுவடுகளும் நல்லிணக்கத்தின் அவசியமும்.!!!

Share :

காரமுனை விவசாயிகளுடன் பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் கலந்துரையாடல்.!!!

காரமுனை ஆணை சுட்ட கட்டு விவசாய அமைப்பின் அங்கத்தவர்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களுக்குமிடையிலான கலந்துரையாடல் இன்று (12) அமைப்பின் தலைவர் நபீர் அவர்களின் தலைமையில் காரமுனையில் அமைந்துள்ள அமைப்பின் காரியாலயத்தில் நடைபெற்றது.

இதன்போது விவசாயிகள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதுடன், அவற்றிற்கு நிலையான தீர்வுகளை பெற்றுக்கொடுப்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

மேலும் விவசாய நடவடிக்கைகளை மேம்படுத்துதல், நீர்ப்பாசன வசதிகள், காணி தொடர்பான பிரச்சினைகள் மற்றும் உற்பத்தி தொடர்பான சவால்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களும் இக்கலந்துரையாடலில் பேசப்பட்டன.

இக்கலந்துரையாடலில் கோரளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச சபை உறுப்பினர்களான எஸ்.எம். தாஹிர், ஜே.எம். முனாபீர், கோரளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் என்.எம். அனஸ், ஒட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் தாஜுடீன், விவசாய அமைப்புகளின் தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் வட்ட விதானைமார்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1066780

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time