உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

November 5, 2026

Hot News

IMG-20261102-WA0034
தரவரிசையில் முன்னேறும் இலங்கை; மக்களின் வாழ்க்கையில் எப்போது முன்னேற்றம்?
IMG-20261026-WA0070
பேரிடர்களின் பிடியில் உலகம்: இயற்கையின் எச்சரிக்கையும் மனிதகுலத்தின் பொறுப்பும்.!!!

Share :

மட்டக்களப்பில் வீடு உடைத்து கையடக்கத் தொலைபேசி திருட்டு: இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் நால்வர் கைது.!!!

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்புறோஸ் வீதியில் வீடொன்றை உடைத்து கையடக்கத் தொலைபேசி மற்றும் பணம் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில், திருடப்பட்ட தொலைபேசியைக் கொள்வனவு செய்தவர் மற்றும் அதனை விற்பனை செய்த வர்த்தக நிலைய உரிமையாளர்கள் உள்ளிட்ட நால்வர் இன்று வியாழக்கிழமை (05) கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 2024ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் திகதி, அம்புறோஸ் வீதியிலுள்ள பூட்டப்பட்ட வீடொன்றை உடைத்து உள்நுழைந்த திருடர்கள், சுமார் 40,000 ரூபாய் பெறுமதியான கையடக்கத் தொலைபேசி ஒன்றையும் 5,500 ரூபாய் பணத்தையும் திருடிச் சென்றுள்ளனர். இதனையடுத்து வீட்டின் உரிமையாளர் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், திருடப்பட்ட கையடக்கத் தொலைபேசி தொடர்பான தகவல்கள் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டன. அதன் விசாரணைகளின் அடிப்படையில், குறித்த தொலைபேசியைப் பயன்படுத்தி வந்த நபர் தொடர்பான தகவல்கள் பொலிஸாருக்கு வழங்கப்பட்டன.

இதனையடுத்து, மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸ் நிலையத்தின் பெரும் குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் வை. விஜயராஜா தலைமையிலான குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இதன்போது, திருடப்பட்ட தொலைபேசியைப் பயன்படுத்தி வந்த ஒருவர் மட்டக்களப்பு நகரப் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், காத்தான்குடியிலுள்ள கையடக்கத் தொலைபேசி விற்பனை நிலையமொன்றில் பணம் கொடுத்து குறித்த தொலைபேசியைக் கொள்வனவு செய்ததாகத் தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில், குறித்த விற்பனை நிலையத்தின் உரிமையாளர் உள்ளிட்ட மேலும் இரு கையடக்கத் தொலைபேசி விற்பனை நிலைய உரிமையாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்படி, இச்சம்பவம் தொடர்பில் மொத்தம் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 24, 38, 45 மற்றும் 50 வயதுடையவர்கள் எனவும், மட்டக்களப்பு நகரம் மற்றும் காத்தான்குடி பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்களை விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1295552

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time