உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

November 4, 2026

Hot News

IMG-20261102-WA0034
தரவரிசையில் முன்னேறும் இலங்கை; மக்களின் வாழ்க்கையில் எப்போது முன்னேற்றம்?
IMG-20261026-WA0070
பேரிடர்களின் பிடியில் உலகம்: இயற்கையின் எச்சரிக்கையும் மனிதகுலத்தின் பொறுப்பும்.!!!

Share :

கென்யாவுடன் உறவுகளை வலுப்படுத்தும் இலங்கை: உப ஜனாதிபதியைச் சந்தித்தார் பிரதமர் ஹரிணி.!!!

பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாடு (CHOGM 2026) நடைபெற்று வரும் நிலையில், இலங்கைப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவும் கென்யாவின் உப ஜனாதிபதி பேராசிரியர் கித்துரே கிந்திகியும் இருதரப்புச் சந்திப்பொன்றை நடத்தியுள்ளனர்.

அன்டிகுவா மற்றும் பார்புடாவில் நடைபெற்ற பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டின் இடையே இச்சந்திப்புநேற்று (03) இடம்பெற்றுள்ளது.

இதன்போது, இலங்கைக்கும் கென்யாவுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் இரு தரப்பினரும் விரிவாகக் கலந்துரையாடியுள்ளனர்.

குறிப்பாக, விவசாயம், வர்த்தகம், முதலீடு மற்றும் காலநிலை நிதியளிப்பு உள்ளிட்ட முக்கிய துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இலங்கைக்கும் கென்யாவுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் இராஜதந்திர உறவுகளை மேலும் மேம்படுத்துவதற்கான புதிய வாய்ப்புகளை ஆராயும் வகையில் இச்சந்திப்பு அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1292622

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time